
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டெஸ்லா, மற்றும் எக்ஸ் நிறுவனங்களின் தலைமைச் செயலாளர் ஆவார். இவர் தற்போது புதிதாக எக்ஸ் டிவி (X TV) என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார். இதனை அமேசான் பிரைம் வீடியோ மற்றும் netflix போன்ற ஓடிடி ஆப்கள் மூலமாக ஸ்மார்ட் டிவியில் எக்ஸ் டிவியையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த எக்ஸ் டிவி திரைப்படங்கள் மற்றும் லைவ் நிகழ்ச்சிகளை பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தற்போது ஆண்ட்ராய்டு டிவிகளில் மட்டுமே கிடைக்கும். மேலும் விரைவில் எல்ஜி, அமேசான், ஃபயர் டிவி, கூகுள் டிவியிலும் பயன்படுத்தும் வகையில் அப்டேட்டுகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.