நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் பல முக்கிய நகரங்களை இணைக்க விதமாக இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ரயில்களில் கட்டணம் அதிகமாக இருந்தாலும் பயணிகள் சொகுசாக பயணம் செய்வதால் அதிகமான மக்கள் பயணிக்கின்றனர். இந்த நிலையில் தற்போது இந்தியாவில் 7 வந்தே பாரத் ரயில் பயன்பாட்டுக்கு வர உள்ள நிலையில் பயணிகளின் வசதிக்கு ஏற்றது போல புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

அதன்படி படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் சேவையை இந்த நிதியாண்டுக்குள் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் வந்து மெட்ரோ ரயில் சேவையும் இந்த நிதியாண்டுக்குள் அறிமுகம் செய்யப்படும் என்றும் ஏசி தேவைப்படாத பயணிகளுக்கு அதில் 22 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த புதிய வசதி அக்டோபர் 31ஆம் தேதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.