நாடு முழுவதும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை செயல்படுத்த தேவையற்ற பேப்பர் மற்றும் நேரடி பணப்பரிவினைகளை தவிர்த்துக் கொள்ளும்படி மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து மாநில அரசுகளும் அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வரும் நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் வாடிக்கையாளர்கள் மின் கட்டணத்தை எளிமையாக whatsapp மூலம் செலுத்தும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி பயனர்கள் 07552551222 என்ற whatsapp எண்ணுக்கு முதலில் ஒரு செய்தியை அனுப்ப வேண்டும். அதிலிருந்து வெளியேறாமல் பயனர்களின் மின் பயன்பாட்டை உறுதி செய்து கட்டணத்தை செலுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.