புதுச்சேரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு வாரந்தோறும்  மூன்று முட்டை வழங்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாணவர்களுக்கு கோடை  விடுமுறை முடிவடைந்து தற்போது வகுப்பு கள் நடைபெற்று வரும் நிலையில் இன்னும் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு பிறகு இன்று முதல் மாணவர்களுக்கு முட்டை வினியோகம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அக்ஷய பாத்திரம் என்ற தொண்டு அமைப்பு மதிய உணவை வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் சார்பாக சைவ உணவுகள் மட்டுமே வழங்குவதால் ஏற்கனவே மதிய உணவு வழங்கி வந்த மதிய உணவு சமையல் கூடங்கள் மூலமாக முட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.