தமிழகத்தில் பெண்கள் கருக்கலைப்பு செய்வதற்கு அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் தனி வாரியம் அமைப்பது குறித்து தமிழக சுகாதார துறை செயலாளர் அளித்துள்ள பேட்டியில், மருத்துவ ரீதியாக கருக்கலைப்பு செய்வதற்கு ஒவ்வொரு மாநிலமும் அதற்கான தனி வாரியம் அமைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கர்ப்பிணிகளை பரிசோதனை செய்து சிசுவை கலைப்பதற்கு கருத்துக்களை அந்த வாரியம் மூன்று நாட்களுக்குள் வழங்க வேண்டும்.

கருக்கலைப்பு செய்யப் போதிய காரணம் இல்லை என்றால் விண்ணப்பங்களை நிராகரிக்க அந்த வாரியத்திற்கு அதிகாரம் உண்டு. தற்போது மாநிலத்திற்கு ஒரே ஒரு வாரியம் இருப்பதால் விண்ணப்பங்கள் மீது உரிய நேரத்தில் முடிவு எடுக்க முடியாத நிலை இருக்கிறது. இதனால் மாநிலம் முழுவதும் 32 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் தனித்தனியாக கருக்கலைப்பு அனுமதி வழங்கும் வாரியத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.