மத்திய அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின்  நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இளைஞர்களுக்கான சிறப்பு திட்டங்களில் ஒன்றான பிரதான் மந்திரி கௌசல் விகாஸ்  யோஜனா திட்டமும் ஒன்று. இதன் மூலமாக லட்சக்கணக்கான மக்கள்   வேலை வாய்ப்பு பெற்றுள்ளார்கள். இந்த திட்டம் 2015 ஆம் வருடம் தொடங்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கமே இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிப்பதாகும். இந்த திட்டத்தின் மூலமாக 40 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களுக்கு தேவையான விவசாய  திறன்களை கொடுத்து உற்பத்தி தன்னை மேம்படுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்கி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்துள்ளது.

இந்த திட்டத்தில் 15 முதல் 59 வயது வரை உள்ள அனைத்து இந்திய குடிமக்களும் இணைந்து பயன்பெறலாம். உற்பத்தி விவசாயம் கட்டுமானம் முடித்த பல துறைகளிலும் பல்வேறு தரம் மேம்பாட்டு பயிற்சி இந்த திட்டம் வழங்குகிறது. இதில் சேர்ந்த பயிற்சி பெற குறிப்பிட்ட கல்வி தகுதி எதுவும் கிடையாது. இருப்பினும் சில பயிற்சி திட்டங்களுக்கு குறிப்பிட்ட கல்வி தொகைகள் தகுதிகள் உள்ளன