சமீப நாட்களாகவே தக்காளி விலை வரலாறு காணாத விலையேற்றத்தால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தக்காளியை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் ஆந்திராவில் நடந்த கொலை சம்பவம்  தக்காளி வியாபாரிகளை அதிர வைத்துள்ளது. அதாவது ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி அருகே உள்ள போடிமல்லதின்னா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் ரெட்டி. இவர் தன்னுடைய நிலத்தில் தக்காளி பயிரிட்டு அறுவடை செய்தார்.

இதில் தற்போது தக்காளி விலை கடுமையாக உயர்ந்ததால் அவர் லட்ச கணக்கில் தனக்கு வருமானம் கிடைத்தது என்றும் கடந்த 20 நாட்களில் மட்டும் 30 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியதாகவும்  தெரிவித்தார். இந்நிலையில் வியாபாரம் செய்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய நிலையில் அவரை வழிமறித்த மர்ம நபர்கள் அவருடைய கை கால்களை கட்டிக்கொண்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளார்கள். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்ததால் அவரை கொலை செய்து 30 லட்சம் ரூபாய் பணத்தை பறித்து சென்றுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.