இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி தளமான ஸ்விக்கி நிறுவனம் தன்னுடைய பயனர்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கி வருகின்றது. தற்போது பயனர்களுக்காக Swiggy one lite என்ற அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது உணவு, மளிகை பொருட்கள் மற்றும் பிக் அப் மற்றும் டிராபிக் சேவைகளை குறைந்த விலையில் வழங்குவதற்கு இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

99 ரூபாய் விலையில் மூன்று மாத சந்தாவுடன் இணைந்து விட்டால் பத்து ரூபாய்க்கு மேல் ஆர்டர் செய்யும் 10 ஆர்டர்களுக்கு இலவச உணவு டெலிவரி வழங்கப்படும். அதேசமயம் இன்ஸ்டாமார்ட்டில் 149 ரூபாய்க்கு மேல் ஆர்டர் செய்யும் முதல் 10 ஆர்டர்களுக்கு இலவச டெலிவரி வழங்கப்படும். மேலும் 199 ரூபாய் விலையில் உள்ள சந்தாவுடன் இணைந்தால் உணவகங்களில் 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றது. அதே சமயம் இந்த புதிய சந்தா திட்டத்தில் இணையாமல் 60 ரூபாய்க்கு மேல் ஆர்டர் செய்தாலே டெலிவரிகளுக்கு 10 சதவீதம் வரை தள்ளுபடி உள்ளது.