கேரளாவில் நிபா வைரஸை கண்டு இனி பயப்பட வேண்டாம் என்று அம்மாநில  மக்கள் பெருமூச்சு விடுவதற்குள் தற்போது அங்கு புதிய வகை நோய் தொற்று பரவது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது திருவனந்தபுரத்தை சேர்ந்த தந்தை மகன் இருவர் கடுமையான  காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதற்கு முன்பே அவர்களுக்கு காய்ச்சலுக்கான சிகிச்சைகள் எடுத்துக்கொண்ட போதிலும் குணமாகதால் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதலில் இவர்களுக்கு  நிபா வைரஸ்  இருக்குமோ என்ற அச்சத்தில் சோதனை  நடத்தப்பட்டது. ஆனால் நிஃபா காய்ச்சல் இல்லை என்பது  உறுதி செய்யப்பட்ட பிறகு நடத்தப்பட்ட ரத்த பரிசோதனையில் அவர்களை பாக்டீரியாவில் உருவாகும் “புருசெல்லோசிஸ்” நோய் தாக்கியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த நோய் மிக அபாயகரமானது. முதலில் காய்ச்சலை ஏற்படுத்தி அதன் பிறகு நரம்பு மண்டலத்தை தாக்கி செயல் இழக்க செய்து கடைசியில் இதயத்தை தாக்கும் பாக்டீரியா தான் புருசெல்லோசிஸ். ஆடு, மாடு, பன்றி  போன்றவற்றிலிருந்து இந்த காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.