இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. மக்கள் அனைவரும் இருந்த இடத்திலிருந்து கொண்டே அனைத்து வேலைகளையும் முடித்து விடுகின்றனர். இன்னும் சொல்லப்போனால் உணவு கூட வீடு தேடி வருகிறது. அந்த அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து விட்டது.

இந்நிலையில் zomato புதிய சேவையை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது வீட்டு உணவை மிஸ் செய்பவர்களுக்கு zomato every day என்ற பெயரில் வீட்டு உணவு வழங்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக வீட்டு சமையல் கலைஞர்களுடன் இணைந்து Zomato food partners செயல்பட்டு வருகிறது. 89 ரூபாயில் தொடங்கும் வீட்டு உணவு தற்போது குறுக்கானில் கிடைக்கிறது. மேலும் சில நாட்களில் மற்ற நகரங்களுக்கும் விரிவடையும் என்று Zomato தெரிவித்துள்ளது.