ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய இளைய மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது மகள் திருமண அழைப்பிதழை வித்தியாசமாக அடிக்க வெங்கடேஷ் முடிவு செய்துள்ளார். அந்த வகையில் 2000 ரூபாய் நோட்டை போல் அதே அளவில் மணமகள், மணமகன் போன்ற பெயர்களை முன்புறத்தில் அச்சடித்துள்ளார்.

இதனையடுத்து பின்புறத்தில் இதர விவரங்கள் இடம் பெற்று இருந்தது. இந்த திருமண அழைப்பிதழை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்கிய போது அவர்கள் 2000 ரூபாய் நோட்டை வாங்கியது போன்று உணர்வு உள்ளதாக கூறியுள்ளனர். இவர் ஏற்கனவே தனது மூத்த மகளின் திருமண அழைப்பிதழை எ.டி.எம் கார்டு வடிவத்தில்  அச்சடித்து இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். வித்தியாசமான திருமண அழைப்பிதழ் அச்சடித்த வெங்கடேசை பலரும்  பாராட்டி வருகின்றனர்.