இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைய அடைய பல்வேறு நவீன மாற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதயத்துடிப்பை கணக்கிடுவது, ஒரு நாளைக்கு எத்தனை அடிகளை எடுத்து வைக்கிறோம் என்பது முதலான  அனைத்து தகவலையுமே ஸ்மார்ட் வாட்ச் நாம் தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் கூகுள் நிறுவனம் கடந்த ஒரு மாதம் WEAR என்கிற ஆபரேடிங் சிஸ்டம் கொண்ட ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் செய்திருந்தது.

அதாவது ஆப்பிள் நிறுவன ஸ்மார்ட் வாட்ச் விலையை போல உயர்தரத்தில் வியர் ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த WEAR ஸ்மார்ட் வாட்சில் whatsapp செயலியை ஸ்மார்ட் போன் இல்லாமல் உபயோகம் செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸாப் மெசேஜ்களை ரிப்ளே செய்வது, வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் வசதி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.