ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் இந்தியாவில் இனி பாஸ்வேர்டுகளை பகிர அனுமதிக்கப்படாது என்று  அறிவித்துள்ளது. ஒரே வீட்டில் வசிக்கும் நபர்களால் மட்டுமே இனி நெட்பிளிக்ஸ் கணக்கிற்கான பாஸ்வேர்டை பகிர முடியும் என்றும் வேறு நபர்களுடன் பாஸ்வேர்டை பகிர்ந்தால் பயனாளர்களிடமிருந்து அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறையானது இன்று முதல் அமல்படுத்தியது நெட்பிளிக்ஸ். இந்த ஆண்டில் தனது வருவாயை அதிகரிக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. மேலும், நெட்பிளிக்ஸ் தளத்தில் இனி விளம்பரங்களை கொடுக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளது.