ஜப்பானில் மிகவும் பிரபலமான ‘அண்டர்கிரவுண்ட் ஐடல்’ பாடகி ஹரி மாட்சுமோட்டோ, தனது ரசிகர்களுக்கு வழங்கிய வினோதமான ‘சலுகை’ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் அருவருப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக இதுபோன்ற இசை நிகழ்ச்சிகளுக்குப் பிறகு ரசிகர்கள் தங்கள் விருப்பமான பாடகர்களுக்குக் கைகொடுப்பதும், புகைப்படம் எடுப்பதும் வழக்கம்.
ஆனால், ஹரி ஒருபடி மேலே போய், தனது அக்குள் பகுதியை முகர்ந்து பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி அளித்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், முதியவர் ஒருவர் ஹரியின் அக்குள் பகுதியை முகர்ந்து பார்ப்பதும், அதற்குப் பிறகு ஹரி அவரை அரவணைப்பதும் பதிவாகியுள்ளது.
View this post on Instagram
இந்த வினோதமான செயலுக்காக சில ரசிகர்கள் அவருக்கு வாழ்நாள் முழுவதும் ஆதரவு தருவதாகக் கூறினாலும், பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது மிகவும் “அருவருப்பானது” என்றும், பெண் கலைஞர்களை இழிவுபடுத்தும் செயல் என்றும் பலரும் விமர்சித்து வருகின்றனர். ஜப்பானின் சுயாதீன இசைத்துறையில் நிலவும் கடும் போட்டி காரணமாக, ரசிகர்களைத் தக்கவைக்க இது போன்ற எல்லை மீறிய செயல்களில் கலைஞர்கள் ஈடுபடுவது கவலையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
