கத்தாரின் தோஹாவில் உள்ள வெஸ்ட் எண்ட் சர்வதேச மைதானத்தில் இந்தியா ‘ஏ’ அணிக்கும், பாகிஸ்தான் ‘ஷாஹீன்ஸ்’ அணிக்கும் இடையே நேற்று (நவ. 16) நடைபெற்ற ஆசியக் கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் மோதலில், பாகிஸ்தான் வீரர்கள் மீண்டும் சர்ச்சைக்குரிய செயல்களில் ஈடுபட்டனர்.

2025 ஆம் ஆண்டு நடந்த ஆசியக் கோப்பையில் அவர்கள் காட்டிய அநாகரிகச் செயல்களிலிருந்து எந்த மாற்றமும் இல்லை என்பதை இது வெளிப்படுத்தியது. இதில், பாகிஸ்தான் அணியின் மூத்த அணியில் இன்னும் விளையாடாத சுழற்பந்து வீச்சாளர் சாத் மசூத்தின் செயல் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்தியா ‘ஏ’ அணியின் துணை கேப்டன் நமன் திர், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியவர். அவர் 20 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 175 ஸ்ட்ரைக் ரேட்டில் 35 ரன்கள் எடுத்து ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த நிலையில், மசூத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

விக்கெட் வீழ்த்திய உடனேயே, மசூத் கோபத்துடன் நமன் திறை நோக்கி அநாகரிகமான முறையில் வெளியேறுமாறு ‘செண்ட்-ஆஃப்’ கொடுத்தார். இந்த செயல் சமூக ஊடகங்களில் உடனடியாகப் பரவி, மசூத்துக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.

“>