உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பெல்டாரா ரோடு ரயில் நிலையத்தில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது.   ரயில்வே பிளாட்பாரத்தில் துாங்கிய சிறுவனை பூட்ஸ் காலால் தாக்கிய ரயில்வே பாதுகாப்பு படை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உ.பியின் பெல்தரா ரயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் தூங்கி கொண்டிருந்த சிறுவனை ரயில்வே காவலர் ஒருவர் தனது பூட்ஸ் காலால் மிதிப்பதுடன், எட்டி உதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கண்டனங்கள் எழுந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.