ரஷ்யாவின் லெனின்கிராட் பகுதியில், உயிரிழந்த கணவரின் சடலத்துடன் 4 ஆண்டுகளாக ஒரு பெண் குடும்பம் நடத்தி வந்த சம்பவம் உலகையே அதிர வைத்துள்ளது. 49 வயதான விளாதிமிர் என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி ஸ்வெட்லானா உண்மையை மறைத்து, கணவரின் உடலை மம்மியாக மாற்றி தனது படுக்கையறையிலேயே வைத்துள்ளார். “யாரிடமாவது உண்மையைச் சொன்னால் அனாதை இல்லத்தில் விட்டுவிடுவேன்” என தனது 4 குழந்தைகளையும் மிரட்டி வைத்திருந்த அந்தப் பெண், கணவர் மீண்டும் உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் எகிப்திய கடவுளான ‘அனுபிஸ்’ உருவம் மற்றும் மண்டை ஓடுகளைக் கொண்டு வினோத மாந்திரீக சடங்குகளையும் செய்து வந்துள்ளார்.
நான்கு ஆண்டுகளாக சமூக நலப் பணியாளர்கள் வீட்டிற்கு வந்து சென்றும் கண்டறியப்படாத இந்த மர்மம், சமீபத்தில் அவர்கள் நடத்திய தீவிர சோதனையில் அம்பலமானது. தற்போது அந்தப் பெண் மனநலப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், பிணத்துடன் வாழ்ந்த குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலை எழுந்துள்ளது.
