
அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள டல்லாஸ்-ஃபோர்ட் வர்த் விமான நிலையத்தில் கடந்த மார்ச் 14ஆம் தேதி விநோதமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. சமந்தா பால்மா என்ற பெண், விமான நிலையத்துக்குள் நிர்வாணமாக நடந்து வந்து, தன்னை காதல் கடவுள் வீனஸ் என்று அறிவித்து, இருவரை துரத்தி கடித்தும், பென்சிலால் குத்தியும் தாக்கியுள்ளார். அதோடு விமான நிலைய உணவக மேலாளரை தன்னுடைய பென்சிலை வைத்து முகத்திலும் தலையிலும் குத்தியதுடன், அவரது கையை கடித்தும் கொடூரமாக தாக்கினார். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Woman strips n*ked and storms through Dallas Fort Worth Airport in a huge public meltdown
The woman shrieked and sprinted down the concourse, leaving the frame, while no authorities were seen intervening
There were no signs of restraints, arrests, or immediate action taken by… pic.twitter.com/8y8jGfCGwq
— Unlimited L’s (@unlimited_ls) March 27, 2025
அந்தப் பெண் ஏர்போர்ட்டில் நிர்வாணமாக அங்கும் இங்கும் ஓடி அங்கிருந்தவர்களை தாக்க முயற்சி செய்யும் நிலையில் விமான நிலையத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரி அவரை தடுக்க முயல்கிறார். இருப்பினும் அந்தப் பெண் கத்திக்கொண்டு அங்கும் இங்கும் ஆவேசமாக ஓடுகிறார். இதை பார்த்து அங்கிருந்த பயணிகள் மிகவும் அதிர்ச்சி அடைந்த நிலையில் இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சற்று மனநலன் பாதிக்கப்பட்டவர் என்றும் தன்னுடைய 8 வயது மகளுடன் விமானத்தில் பயணம் செய்வதற்காக வந்தபோதுதான் இப்படி நடந்து கொண்டதும் தெரிய வந்தது. மேலும் அவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.