
ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஜெர்மி ரென்னர். இவர் அவெஞ்சர்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் அமெரிக்காவில் உள்ள நொவாடா மாகாணத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது பனிப்புயலில் சிக்கி கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயங்கள் அடைந்த ஜெர்மி ரென்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் ஜெர்மி ரென்னர் தான் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அதிகாலை உடற்பயிற்சி மற்றும் புத்தாண்டு தீர்மானங்கள் என இந்த வருடத்தில் எல்லாம் மாறிவிட்டது. இந்த விபத்து என்னுடைய குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது. நான் நலம் பெற வேண்டும் என குறுஞ்செய்தி அனுப்பி அனைவருக்கும் நன்றி. இந்த விபத்தில் உடைந்த என்னுடைய 30-க்கும் மேற்பட்ட எலும்புகள் சரியாகி வலுவடையும். மேலும் உங்கள் அனைவருக்கும் அன்பு மற்றும் ஆசிகள் என்று பதிவிட்டு இருக்கிறார்.
"Morning workouts, resolutions all changed this particular new years… Spawned from tragedy for my entire family, and quickly focused into uniting actionable love❤️"
— via Instagram. pic.twitter.com/bFYJMweCsy
— Jeremy Renner Net (@JRennerNet) January 22, 2023