வட இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலத்தில் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள ஒரு புனிதமான இடம் வாரணாசி. இது காசி என்றும் அழைக்கப்படுகிறது. காசிக்கு இந்தியா முழுவதும் மட்டும் இன்று வெளிநாடுகளில் இருந்தும் தினசரி ஆயிரக்கணக்கானோர் செல்கிறார்கள். இந்தியாவின் புனித தலங்களில் ஒன்றாக கருதப்படும் காசி பல நூற்றாண்டு கால பழமையான வரலாறு கொண்டது.

இது புனித தலமாக கருதப்படும் நிலையில் பிரசித்தி பெற்ற சிவபெருமான் ஆலயம் அமைந்துள்ளது. இந்த நகரத்திற்கு புனித வழிபாட்டிற்காக தினசரி பலர் புனித பயணம் மேற்கொள்கின்றனர். இந்த நிலையில் வாரணாசியில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அதில் சிலர் பொதுவெளியில் சிறுநீர் கழிப்பது போன்று தோன்றுகிறது. புனிதமான காசியில் இப்படி அசுத்தம் செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வாரணாசி பிரதமர் மோடியின் சொந்த தொகுதி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.