ஐரோப்பிய கண்டத்தின் முக்கிய நாடுகளில் ஒன்று கிரீஸ். இந்த நாட்டின் தலைநகரம் ஏதேன்ஸ். இது மிகவும் பழமை வாய்ந்த நகரமாகும். இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வருகிறார்கள். இந்த நகரம் நேற்று திடீரென ஆரஞ்சு நிறமாக மாறியது. இது பொதுமக்கள் மத்தியிலும் சுற்றுலா பயணிகள் மத்தியிலும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியது. இந்த  நகரம் பார்ப்பதற்கு செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்தது.

இந்நிலையில் ஆரஞ்சு நிறமாக ஏதேன்ஸ் நகரம் மாறியதற்கு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா விளக்கம் அளித்துள்ளது. அதாவது மேக கூட்டங்கள் சாதாரணமாக நகரும்போது அதனுடன் பாலைவன மணலும் கலந்ததால் தான் இப்படி ஆரஞ்சு நிறமாக நகரம் மாறி உள்ளதாக நாசா விளக்கம் அளித்துள்ளது. இதேநிலை இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஆரஞ்சு நிறமாக மாறிய ஏதென்ஸ் நகரத்தின் புகைப்படங்கள் தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.