அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் பொருளாதார மன்ற மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய நிதி நிறுவனமான ஜேபின் மோர்கன் சேஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேமின் டைமன் கலந்து கொண்டார். இவர் நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை மிகவும் புகழ்ந்து பேசினார். அவர் பேசியதாவது, இந்தியாவில் பிரதமர் மோடி மேற்கொள்ளும் பணிகளை நாம் அமெரிக்காவிலும் செய்ய வேண்டும். அவர் இந்தியாவுக்கு நம்ப முடியாத அளவுக்கு கல்வி கட்டமைப்பையும், அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார்.

இது உண்மையிலேயே நம்ப முடியாத மிகப்பெரிய பணி. இதே பணியை நாம் அமெரிக்காவிலும் செய்ய வேண்டும். அவர் 40 கோடி இந்தியர்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்துள்ளார். அவர்களுக்கு கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளார். இந்தியாவில் 70 கோடி மக்கள் வங்கி கணக்கை தொடங்கி வங்கிகள் மூலம் எளிதாக பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கு பிரதமர் மோடி தான் காரணம். மோடி என்ற ஒரு மனிதரின் உறுதிகாரணமாக ஒட்டுமொத்த நாட்டையும் இந்தியர்கள் முன்னேற்றி வருகிறார்கள். அவர் பழமையான அதிகார வர்க்கத்தை தகர்த்தெறிந்துள்ளார். மேலும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் கைரேகை மற்றும் கண் விழியின் மூலம் அங்கீகரிக்கப்படுகிறார்கள் என்று கூறினார்.