கிரீஸ் நாட்டின் தலைநகரமான ஏதென்ஸ் நகரின் வானம் நேற்று திடீரென ஆரஞ்சு நிறத்தில் மாறியது. தொன்மையான நகரம் திடீரென நிறம் மாறியதால் சுற்றுலா பயணிகளுடன் உள்ளூர் மக்களும் பீதி அடைந்தனர். இது குறித்து நாசா, மேக கூட்டத்துடன் சஹாரா பாலைவனத்தின் மண் துகள்கள் கலந்ததால் இதுபோன்ற ஆரஞ்சு நிற போர்வை போர்த்தியது போல் மாறியதாகவும் மேலும் இரண்டு நாட்களுக்கு இது போன்ற நிலை தொடரும் எனவும் விளக்கம் அளித்துள்ளனர்.