நடிகர் அஜித்தின் மைத்துனரான நடிகர் ரிச்சர்ட் திரௌபதி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் புகழ்பெற்றார். அவர், நடிகை யாஷிகா ஆனந்த்தை காதலிப்பது தற்போது உறுதியாகியுள்ளது. சூரிய உதயத்தில் யாஷிகா, ரிச்சர்ட்டுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு இதை உறுதிப்படுத்தியுள்ளனர். இருவருக்கும் அஜித் முன்னிலையில் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் கடும் ஷாக்கில் உள்ளனர்.

யாஷிகா ஆனந்த், சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். அடுத்தடுத்த படங்களிலும் கவர்ச்சியாக நடித்து பேசப்பட்டார். படவாய்ப்புகளும் குவிந்து வந்தன. சமீபத்தில் எதிர்பாராத கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த அவர் பல மாதங்கள் ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் பழைய நிலைக்கு மீண்டு, ஒரு சில படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.