விமானத்தில் பயன்படுத்தப்படும் எரிபொருள் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கடந்த மூன்று மாதங்களாகவே எரிபொருள் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டதால் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அக்டோபர் ஆறாம் தேதி முதல் பயண கட்டத்தை 300 முதல் 1000 வரை உயர்த்தி உள்ளது.

இந்த கட்டண உயர்வு, முதல் 500 கி.மீ-ரூ.300, 501-1,000 கி.மீ-ரூ.400, 1,001-1,500 கி.மீ.-ரூ.550, 1,501-2,500 கி.மீ.-ரூ.650, 2,501-3,500 கி.மீ.-ரூ.800, 3,500 கி.மீ.-மேல் ரூ.1,000. இண்டிகோவின் இந்த கட்டண உயர்வை தொடர்ந்து, மற்ற விமான நிறுவனங்களுக்கு கட்டணத்தை உயர்த்த வாய்ப்புள்ளது.