இந்தியாவில் 100 நாள் வேலை திட்டத்திற்கு தேவையின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 100 நாள் வேலை செய்தவர்களின் வங்கிக் கணக்கில் 20 நாட்களுக்கு மேல் சம்பளம் வரவு வைக்கவில்லை. அது மட்டுமல்லாமல் நிதி பற்றாக்குறையால் இந்த திட்டம் முடங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் உடனே 23 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க ஊரக வளர்ச்சித் துறை பரிந்துரை செய்த நிலையில் மத்திய அரசு இவ்வாறு அறிவித்துள்ளது.