தமிழகத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை அரசு அமல்படுத்தியுள்ள நிலையில் இந்தத் திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து காலை உணவு திட்டத்தை தெலுங்கானாவில் அமல்படுத்த உள்ளதாக அந்த மாநில அரசு திட்டமிட்ட நிலையில் இந்த திட்டம் தொடர்பாக விரிவாக தெரிந்து கொள்ள அதிகாரிகளை தமிழகத்திற்கு அனுப்பியது.

இந்த நிலையில் தமிழகத்தை போல தெலுங்கானாவில் காலை உணவு திட்டம் அமல்படுத்தப்பட உள்ள நிலையில் முக்கிய திட்டங்களில் ஒன்றாக முதல்வரின் காலை உணவு திட்டம் இருக்கப் போகிறது. இந்த திட்டம் தசரா பண்டிகை பரிசாக அக்டோபர் 24ஆம் தேதி முதல் தெலுங்கானா மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் ஊராக பள்ளிகள் என 28 ஆயிரத்து 807 பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 1 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பயன்பெற உள்ள நிலையில் இதன் மூலம் மாணவர்களின் கல்வித் திறன் உயரும் எனவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.