இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை நிறுத்துவதாக மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதன் காரணமாக நோட்டுக்களை மாற்றுவதற்கான காலக்கெடு செப்டம்பர் இறுதிக்குள் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி காலக்கெடவை நீட்டிக்க வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 97 சதவீத நோட்டுகள் வங்கிகளில் செய்யப்பட்டுள்ளன. மீதியை மக்கள் விரைவாக வங்கிகளில் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதிக்கு பிறகு 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. இந்த நோட்டு தடையால் இனி 500 ரூபாய் நோட்டு மட்டுமே உயர்ந்த தொகை கொண்ட ரூபாய் நோட்டாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.