திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் அருகே தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் 6 வயதுடைய தியா என்ற சிறுமி படித்து வருகிறார். இந்த நிலையில் பள்ளி முடிந்து வேனில் வந்த தியா வீட்டிற்கு முன்பு இறங்கியுள்ளார். அப்போது தியாவின் தம்பி ஆதீஸ்வரன்(3) அக்கா என அழைத்துக் கொண்டே வாகனத்தின் முன்பு சென்றார். அப்போது சிறுவன் நிற்பதை கவனிக்காத ஓட்டுநர் வாகனத்தை இயக்கியுள்ளார்.

இதனால் பள்ளி வேன் மோதி ஆதீஸ்வரன் படுகாயமடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் ஆதிஸ்வரனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே ஆதீஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.