தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர் பாண்டீஸ்வரன். இவரது சகோதரி ஆனந்தி(40). கணவரை இழந்த ஆனந்தி தனது 13 வயது மகனுடன் பாண்டீஸ்வரனுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் மதுபோதையில் பாண்டீஸ்வரன் ஆனந்தியையும் அவரது மகனையும் இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளார். அதன் பிறகு இருவரும் இறந்துவிட்டதாக நினைத்து அச்சத்தில் பாண்டீஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆனால் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுவனையும், ஆனந்தியையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 13 வயது சிறுவன் உயிரிழந்தான்.

ஆனந்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாண்டீஸ்வரனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்