இஸ்ரேலின் மீது ஹமாஸ் அமைப்பினர் திடீரென ராக்கெட்களை வீசி போரை தொடங்கி வைத்தனர். அந்தப் போரானது இன்று வரை 27 நாட்களாக நீடித்து வருகிறது. இதனால் இரண்டு தரப்பினர்க்கும் பல்வேறு இழப்புகள் ஏற்பட்டுள்ளது. உயிரிழப்புகளும் 9000 கடந்து விட்டது. இந்நிலையில் சர்வதேச ஊடகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் காசாவில் அகதிகள் தங்கி இருந்த முகாம் மீது இஸ்ரேலின் விமானப்படை தாக்குதல் நடத்தியதாகவும் அதில் 50 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

அதேபோன்று ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலின் இந்த விமானப்படை தாக்குதலால் 195 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாகவும் 777 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஐநா மனித உரிமைகள் ஆணையம் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலால் அகதிகள் முகாமில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்ததை கருத்தில் கொண்டு இது போர் குற்றத்திற்கு சமமான தாக்குதல் என்று கருதுவதாக குறிப்பிட்டுள்ளது.