தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ் தற்போது ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்ற படத்தில் நடித்து வருகிறார். ராமாயண காப்பியத்தை மையப்படுத்தி எடுத்து வரும் ஆதிபுருஷ் படத்தில் சீதையாக கீர்த்தி சனோனும், ராவணனாக நடிகர் சையிப் அலிகானும் நடிக்கின்றனர். இந்த படத்தின் டீசர் வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் ராமநவமியை முன்னிட்டு படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டது.

இந்நிலையில் தற்போது ஆதிபுருஷ் படத்தின் பிரம்மாண்டமான ட்ரெய்லர் வீடியோவை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த ட்ரெய்லர் தற்போது ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் ஜூன் 19-ஆம் தேதி ஆதிபுருஷ் திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது.