
இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் பாஸ்ட் புட் கலாச்சாரம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. பலரும் இதனை விரும்பி உண்பதால் பெரும்பாலான இடங்களில் உணவின் அழகு மற்றும் சுவையை அதிகரிப்பதற்காக ரசாயன பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றது. அந்த வரிசையில் தற்போது கோபி மஞ்சூரியனும் சேர்க்கப்பட்டுள்ளது. கோவா மபுசாவில் கோபி மஞ்சூரியன் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் செயற்கை நிறம், தரமற்ற சாஸ் ஆகியவற்றால் சுகாதார பாதிப்புகள் ஏற்படுவதாக புகார் எழுந்த நிலையில் பல இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அரசு கோபி மஞ்சூரியனுக்கு தடை விதித்துள்ளது. கர்நாடக மாநிலத்திலும் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. கோபி மஞ்சூரியன் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மைதா, சீனாவின் சாஸ்கள் மனிதர்களின் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. உடலில் சோடியம் அளவை அதிகரித்து உயர் ரத்த அழுத்தம் மற்றும் எடை அதிகரிப்பு, சிறுநீரக பிரச்சனை மற்றும் இதய அடைப்புக்கு இவை வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.