கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஹர்சிகா பூனச்சா. இவருடைய கணவர் புவன். இவரும் ஒரு நடிகராவார். இவர்கள் சமீபத்தில் பெங்களூரில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு இரவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். இவர்கள் சாப்பிட்டுவிட்டு காருக்கு வந்தனர். அப்போது அவர்களிடம் 2 பேர் வந்து தகராறு செய்துள்ளனர்.

அதோடு அவர்கள் நடிகை ஹர்சிகா மற்றும் அவருடைய கணவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக நேற்று நடிகை ஹர்ஷிகாவும் அவருடைய கணவரும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக  கூறியுள்ளனர். மேலும் நட்சத்திர ஜோடி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் கன்னட திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.