தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தேவ் என்ற மகனும், தியா என்ற மகளும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் விளையாட்டில் ஆர்வம் செலுத்தி வரும் நிலையில் தற்போது தேவ் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு அவருடைய மகன் மற்றும் நண்பர்களை பாராட்டியதோடு ப்ளாக் பெல்ட் வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.