பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் தங்களுடைய குழந்தையின் எதிர்காலத்திற்கு இப்போதிலிருந்தே பணத்தை சேமிக்கத் தொடங்கி விடுவார்கள். அப்படி சேமிக்க தொடங்குவதுதான் நல்லது. இவ்வாறு .பெண் குழந்தையின் எதிர்காலத்திற்கு பணத்தை சேமிப்பதற்கு பல்வேறு நல்ல திட்டங்கள் இருக்கின்றன அதிலும் முக்கியமாக சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை இந்திய தபால் துறை செயல்பட்டு வருகிறது. இது பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தையின் பெயரில் அவருடைய பெற்றோர் அல்லது பாதுகாவலரோ கணக்கு தொடங்க முடியும்.

இந்நிலையில் மத்திய அரசின் கீழ் இயங்கும் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம், சுகன்யா சம்ரிதி யோஜனா, கிசான் விகாஸ் பாத்ரா, மாத வருவாய் சேமிப்பு திட்டம் ஆகியவற்றுக்கு வட்டியை உயர்த்தி உத்தரவிட்டிருக்கிறார் பிரதமர் மோடி. இதன் மூலம் பெண் குழந்தைகளுக்கு பயனளிக்கும் சுகன்யா சம்ரிதி ஹோஜனாவின் வட்டி இனி 8% சதவீதமாக மாறுகிறது. மேலும் இந்த திட்டம் உடனடியாக இன்று முதலே அமலுக்கு வருகிறது.