சாலை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 15 ஆண்டுகளுக்கு பழமையான அரசு வாகனங்கள் அனைத்தும் அழிக்கப்படும் என்று  அறிவித்துள்ளது. புதிதாக கொண்டுவரப்படும் விதிகளின் படி இன்று (ஏப்.1 )முதல் மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான அரசு வாகனங்கள், பதிவு ரத்து செய்யப்படும்.

மேலும் போக்குவரத்து கழகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான பேருந்துகளுக்கும் இந்த விதிமுறை பொருந்தும்.  எனினும், ராணுவம், சட்ட அமலாக்கம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு போன்ற சிறப்பு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.