சென்னையில் உள்ள தனியார் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் முன்னாள் கிரிக்கெட்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். நிகழ்ச்சியில் பேசிய அஸ்வின் மாணவர்களை நோக்கி இங்கிலீஷ் என்று கேட்க மாணவர்கள் ஆரவாரம் செய்தனர். அடுத்ததாக தமிழ் என்று கேட்க பலத்த ஆரவாரம் எழுப்பினர். அதனை தொடர்ந்து ஹிந்தி என்று கேட்க மாணவர்கள் அமைதி காத்தனர்.

இதனைத் தொடர்ந்து பேச ஆரம்பித்த அஸ்வின் “நான் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஹிந்தி நமது தேசிய மொழி கிடையாது. அது ஒரு அதிகாரப்பூர்வ மொழி என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் அஸ்வின் கிரிக்கெட்டில் இருந்து விலகி ஓய்வை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.