ஈரான் நாட்டில் ஹிஜாப் சரியாக அணியாத காரணத்தினால் மாஷா அமினி என்ற இளம் பெண்ணை போலீசார் தாக்கியுள்ளனர். இதில் அந்த இளம் பெண் உயிரிழந்துள்ளார். அவருடைய மரணத்திற்கு நீதி கேட்டு ஈரான் நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தை ஒடுக்குவதற்காக ஈரான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதற்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்களும் ஆதரவு தெரிவித்தனர்.

இதனிடையே கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்ற செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஈரான் நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனை சாரா கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணியாமல் விளையாடி உள்ளார். இதற்காக ஈரான் அரசு அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அதோடு அவர் இனிமேல் ஈரான் நாட்டிற்குள் நுழையக்கூடாது எனவும் மிரட்டல் விடுத்துள்ளது. இந்த நிலையில் செஸ் வீராங்கனை சாரா நாடு கடத்தப்பட்டு விட்டதாகவும், இனி ஈரானுக்கு திரும்பி வந்தால் கைது நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுவார் எனவும் தெரிகிறது. இதனால் அவர் தற்போது ஸ்பெயினில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.