பாகிஸ்தான் நாட்டில் ஷிகர்பூர் நகரில் சானா ராம்சந்த் குல்வானி என்ற பெண் மருத்துவர் வாழ்ந்து வருகிறார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு சி.எஸ்.எஸ் தேர்வில் வெற்றி பெற்றார். அதன் பின் அவர் பி.ஏ.எஸ் படிப்பதற்காக சேர்ந்துள்ளார்.

இந்த தேர்வில் அவர் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் இவர் பாகிஸ்தானில் உள்ள அட்டாக் மாவட்டத்தின் ஹசனாப்தால் நகரின் உதவி ஆணையர் மற்றும் நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு பின் சி.எஸ்.எஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ள முதல் இந்து பெண் சானா ராம்சந்த் குல்வானி தான் என்பது குறிப்பிடத்தக்கது.