துருக்கி மற்றும் சிரியாவை தாக்கிய அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரம் ஆகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கான்கிரீட் குவியல்களை அகற்ற அகற்ற பிணங்கள் தென்பட்டுக் கொண்டிருப்பதால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகின்றது. இதுவரையில் இரு நாடுகளிலும் பலியானோர் எண்ணிக்கை இதுவரை 35000 கடந்துள்ளது. மேலும் மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது.

இந்த நிலையில் உலகையே அதிர வைத்த இந்த பேரழிவு குறித்து உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குனர் ஹான்ஸ் க்ளூஜ் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது “கடந்த நூறு ஆண்டுகளில் ஐரோப்பிய பிராந்தியத்தில் இதுபோன்ற மோசமான இயற்கை பேரழிவை நாம் சந்திக்கவில்லை. இதுதான் மிக மோசமான பேரழிவு. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இதுவரை 22 மருத்துவ குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன” என்று அவர் கூறியுள்ளார்.