நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 43 வயது பெண் தனது கணவரிடம் சேலத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு கடந்த மாதம் நவம்பர் 25ஆம் தேதி வீட்டை விட்டு புறப்பட்டார். அவர் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரது செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சேலத்திற்கு வந்து சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சென்ற விசாரித்தார். அப்போது மருத்துவமனை ஊழியர்கள் அந்த பெண் இங்கு வரவே இல்லை என கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த பெண் கடைசியாக கன்னங்குறிச்சி தாமரை நகரச் சேர்ந்த பூண்டு வியாபாரியான கனகராஜ் என்பவரிடம் பேசி உள்ளார். அவரது பெயர் ரௌடி பட்டியலில் உள்ளது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் அவரை பிடித்து விசாரித்த போது அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. பூண்டு வியாபாரம் செய்வதற்காக கனகராஜ் அந்த பெண்ணின் ஊருக்கு சென்று வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அன்றைய தினம் அந்த பெண் கனகராஜை பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது கனகராஜ் அந்த பெண்ணை காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

அதன் பிறகு தனது கூட்டாளியான சக்திவேல் என்பவரை வரவழைத்தார். பின்னர் இருவரும் சேர்ந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் அங்கிருந்து தப்பிக்க முயன்றார். இவர்கள் விடாமல் அந்த பெண்ணின் தலையில் அடித்து மயக்கம் அடைய வைத்தனர். பின்னர் கூட்டு பலாத்காரம் செய்து அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தனர். யாருக்கும் தெரியாமல் இருக்க நிர்வாண நிலையில் அந்த பெண்ணின் உடலை முப்புதலில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பி வந்தது தெரியவந்தது. போலீசார் அந்த பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சக்திவேல் கனகராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.