திருச்சூர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் வெற்றி பெற்று எம்.பி. ஆன சுரேஷ் கோபிக்கு, மத்திய பெட்ரோலியம், எரிவாயு மற்றும் சுற்றுலாத்துறை இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது. எம்.பி. ஆனாலும் நடிப்பை கைவிட மறுத்த சுரேஷ் கோபி, சில மாதங்களுக்கு முன் தான் மேல் நிர்வாகத்தை கேட்டும், நடிப்பைத் தொடர விருப்பம் தெரிவித்திருந்தார்.

அந்த விருப்பத்தை மறுத்து, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர், முழுமையாக அமைச்சர் பதவியில் கவனம் செலுத்துமாறு கட்சியின் உயர்நிலை அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, சுரேஷ் கோபி தனது 250வது படமான “ஒற்றைக் கொம்பன்” படத்துக்காக வளர்த்த தாடியை சேவ் செய்து, புதிய அரசியல்வாதி தோற்றத்துடன் பதவிக்கான கடமைகளை ஆற்றத் தயாராகி வருகிறார்.

மேலும், வாரத்தில் மூன்று நாட்கள் டெல்லியில் இருப்பதற்கான கட்சி விதிமுறையையும் ஏற்றுக் கொண்டார். இதனால், சுரேஷ் கோபி தனது முழுநேர அரசியல் வாழ்க்கைக்கு விருப்பம் காட்டி, புது லுக்குடன் களமிறங்க உள்ளார்.