புதுச்சேரியில் புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வில்லியனூர் நோக்கி சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரின் முன் பக்க எஞ்சின் பகுதியில் இருந்து திடீரென புகை வந்துள்ளதால் டிரைவர் உடனடியாக வண்டியை நிறுத்திவிட்டு காரில் இருந்து இறங்கி வெளியே சென்றார். அதன்பிறகு சற்று நேரத்தில் கார் மளமளவென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு கொடுக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த காரை அணைத்தனர்.

அதன்பிறகு தீயணைப்புத் துறையினர் சாலையில் இருந்து காரை அப்புறப்படுத்திய நிலையில் சற்று நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சொகுசு கார் தொழிலதிபர் விஷ்ணுவரதன் என்பவருக்கு சொந்தமானது என்றும் காரை டிரைவர் ஜீவா சர்வீஸுக்கு எடுத்துச் சென்றபோது பேட்டரியில் கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரிந்ததும்  தெரியவந்தது.