ஷவர்மா, கிரில் சிக்கனுக்கு தடை…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு….!!!

நாமக்கல் மாவட்டத்தில் ஷவர்மா, கிரில் சிக்கன் உணவு வகைகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அம்மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி அருண் அறிவித்துள்ளார். நேற்று மாலை நாமக்கல்லில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் பல்லை மாணவி ஒருவர் ஷவர்மா சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து அந்த மாணவிக்கு திடீரென்று இன்று காலை வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அச்சிறுமி பரிதாபமாக  உயிரிழந்தார். தொடர்ந்து அங்கு சாப்பிட்ட மேலும் 43 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்விவகாரத்தில் உணவக உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply