வெளிநாடு வாழ் இந்தியர்களுகள் அங்கிருந்தே கணக்கு தொடங்கலாம்…. SBI வங்கி சூப்பர் வசதி…!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டே எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக அனைத்துவித அம்சங்களும் ஆன்லைன் வாயிலாகவே மேற்கொள்ளும் வழிமுறையை இந்த வங்கி வழங்கி வருகிறது. இந்த டிஜிட்டல் வசதிகள் அனைத்தும் பொது மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் எஸ்பிஐ வங்கியில் யோனா ஆப் மூலமாகவே சேமிப்பு கணக்கு அல்லது நடப்பு கணக்கை திறந்து கொள்ள முடியும். இதற்கான வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதற்கு முதலில், யோனோ எஸ்பிஐ செயலியை உங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்/ அதில் என் ஆர் ஐ மற்றும் என் ஆர் ஒ போன்ற விருப்பங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு புதிய பக்கத்தில் கேஒய்சி விபரங்கள் கேட்கப்பட்டிருக்கும். இப்பொழுது உங்களுக்கு அருகில் உள்ள sbi வங்கியில் தேவையான ஆவணங்களை செலுத்துவதற்கான விருப்பத்தை காண்பீர்கள்.

அதில் உங்களுக்கு விருப்பமான கிளையை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் வெளியுறவு அலுவலகம், நீதிமன்ற மேஜிஸ்திரேட், இந்திய தூதரகம், பிரதிநிதி அலுவலகம் அல்லது நீதிபதி ஆகியவர்களிடமிருந்து கேஒய்சி ஆவணங்களை சரிபார்த்து அவற்றை வங்கி கிளைக்கு அனுப்ப வேண்டும். இதன் பின்னரான செயல்பாட்டில் உங்களுக்கு வங்கி கணக்கு திறக்கப்பட்டு இதற்கான அறிவிப் பு கிடைக்கும்.

Leave a Reply