வெளிநாடு சென்று படிக்கும் இந்திய மாணவர்களுக்கு… வெளியான அதிர்ச்சி செய்தி….!!!

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு இந்திய மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட், உத்திரபிரதேசம், குஜராத், ஹரியானா, பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களை சேர்ந்த மாணவர்களுக்கு விசா வழங்குவதற்கான தற்காலிக தடையால் சிக்கல்கள் எழுந்துள்ளன.

பெடரேஷன் பல்கலைக்கழகம் மற்றும் வெஸ்டர்ன் சிட்னி பல்கலைக்கழகம் சமீபத்தில் கல்வி முகவர்களுக்கு அந்தந்த மாநில மாணவர்களிடமிருந்து விசா விண்ணப்பங்களை ஏற்கக் கூடாது என்று அறிவுறுத்தியது. அந்த மாணவர்கள் அளிக்கும் விண்ணப்பங்களில் பெரும்பாலானவை மோசடியானவை என அதிகாரிகள் தெரிவித்தனர்.இதன் மூலம் வரும் கல்வி ஆண்டில் வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.