மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் ஷமீம்கான் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தம்பி நசீம் கான். இவர் தன்னுடைய அண்ணனின் சட்டை பாக்கெட்டில் இருந்து 500 ரூபாய் பணத்தை எடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் 2 பேருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த நசீம் கான் தன்னுடைய தம்பியை ஒரு கத்தியை எடுத்து குத்தி கொலை செய்துள்ளார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நசீம் கானை கைது செய்துள்ளனர்.