அசாம் மாநிலத்தில் உள்ள லிலாபரிக்கும், தேஜ்பூருக்கும் இடையிலான 50 நிமிட விமான பயணத்திற்கு ரூ.349 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த விமானங்கள் அனைத்தும் பிராந்திய விமான இணைப்புத் திட்டத்தின் (UDAN) கீழ் இயக்கப்படுகின்றன. மேலும், இக்ஸிகோ (ixigo) இணையதளத்தின் படி, இந்தத் திட்டத்தின் கீழ் விமான நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளைப் பெற்று வருகின்றனர். அதன் காரணமாகவே இந்த மலிவான விலையில் விமான கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.