புதுச்சேரி மாநிலம் ரெட்டியார்பாளையத்தில் இன்று காலை சாக்கடையில் இருந்து வெளியேறிய விஷவாயு தாக்கி மூதாட்டியும் அவருடைய மகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். அதனைப் போலவே காப்பாற்ற சென்ற மற்றொரு 15 வயது சிறுமியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஷவாயு தாக்கி உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு 30 லட்சமும்,  மற்ற இருவரின் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும் பாதாள சாக்கடை இணைப்பு வழங்குவதில் தவறு நடந்துள்ளதாகவும் இது குறித்து ஆய்வு செய்யவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.